கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக கொரோனா புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை எனவும் இதுவரை, கோவையில் மாவட்டத்தில் 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 146 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 9 நாட்களில் 2,952 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், யாருக்கும் பாதிப்பு இல்லை என்று கோவை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவை மாவட்டத்தில் இதுவரை 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், கோவையில் 146 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறினார்.
சமீபத்தில், கொரோனா பாதிப்படைந்த கரும்புக்க்கடை பகுதியை சேர்ந்த பெண்மணி மட்டுமே கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக கூறினார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இதுவரை திருப்பூர், கோவை மற்றும் நீலகிரியை சேர்ந்த 256 சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.