கோவையிலிருந்து 42 மேகாலயா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!

கோவை: கோவையில் இருந்து 42 மேகாலயா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் இருந்து 42 மேகாலயா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கினால் கோவையில் தங்கி இருந்த வட மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேகாலயாவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்றதன் அடிப்படையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 தனியார் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் மேகாலயா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பப்பட உள்ளனர். அதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் காலையில் உணவு வழஙப்கபட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பலவிஷா என்பவர் கூறும்போது, தாங்கள் மேகாலயா மாநிலத்திற்கு செல்வதற்காக மேகாலயா மாநில அரசிற்கு விண்ணப்பம் செய்து இருந்ததாகவும் அங்கு கிடைக்கப் பெற்ற அனுமதி கடிதத்துடன் தமிழக அரசிடம் அளித்த விருப்ப விண்ணப்பம் ஆகியன சேர்த்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பரிசீலனைக்கு பின் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கோவை மாவட்ட நிர்வாகம் தங்களை மேகாலயா செல்வதற்காக இங்கிருந்து சென்னை வரை தனியார் வாகனத்தில் அழைத்து செல்ல உள்ளதாகவும் தங்களுக்கு வேண்டிய உணவு பொருட்கள் போன்றவற்றை அளித்து உதவியதாக தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...