சென்னை: நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளில் உணவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளில் உணவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 26ம் தேதி நடைபெறவிருந்த பதினோராம் வகுப்பு தேர்வு ஜூன் 2 ஆம் தேதி தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுத தவறிய 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.
மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். தேர்வு எழுதும் மாணவர்ககுக்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும் செய்து தரப்படும் எனவும், பொது போக்குவரத்து தொடங்காதபட்சத்தில் மே மூன்றாவது வாரத்தில் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27ம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாகவும், பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 23ம் தேதி வரையும், பதினோராம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூன் 23ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் அறிவித்தார்.
அரசு எச்சரித்தும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பேசிய அமைச்சர், பள்ளி கட்டணம் செலுத்த கோரி பெற்றோர்களை துன்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகவும், இதனை மீறும் பள்ளிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளில் உணவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு செய்துள்ளதாகவும் வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக படிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
