மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் அனுமதிக்கப்பட்ட கடைகளை விட அதிகமாக கடைகள் திறப்பு - 71 கடைக்கு அபராதம் விதித்த கோட்டாட்சியர்!

கோவை: மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் அனுமதிக்கப்பட்ட கடைகளை விட அதிகமாக கடைகள் திறந்ததால் 71 கடைக்கு கோட்டாச்சியர் அபராதம் விதித்தார்.


கோவை: மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் அனுமதிக்கப்பட்ட கடைகளை விட அதிகமாக கடைகள் திறந்ததால் 71 கடைக்கு கோட்டாச்சியர் அபராதம் விதித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னூர் சாலையில் மொத்த காய்கறி ஏல மையம் செயல்பட்டு வருகிறது.

நீலகிரியில் இருந்து வரும் மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், மேரைக்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்டவைகளும் கர்நாடகா என பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு தரத்திற்கு ஏற்ப ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரானோ வைரஸ் தொற்று காரணமாக பத்து நாட்களாக இந்த மார்க்கெட் முடக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவில் கடைகளை திறந்து கொள்முதல் செய்து வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 100க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தாலும் 35 கடைகளுக்கு மட்டும் சுழற்சி முறையில் அனுமதிக்க பட்டிருந்தது. மேலும், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும், தொழிலாளர்கள் சமூக இடைவேளை கடைபிடிக்க வேண்டும், ஒவ்வொரு கடைகளிலும் கை கழுவ சானிடரி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.



இந்த நிலையில் இன்று மார்க்கெட் பகுதியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் சுரேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்த எதையும் கடைப்பிடிக்காமல் இன்று 71 கடைகள் மார்க்கெட்டில் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.



மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முககவசம் அணியாமல் என எந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காமல் செயல்பட்டு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோட்டாட்சியர் அனுமதியை மீறி செயல்பட்ட 71 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் 71,000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் நாளை முதல் அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைப்பதுடன் நேரம் கடந்து மார்க்கெட் பகுதியில் லோடுகள் ஏற்றிகொண்டு இருக்கும் லாரி போன்ற வாகனங்களும் ஜப்தி செய்யப்படும் என எச்சரித்தார்.

கோட்டாட்சியரின் இந்த நடவடிக்கையை கண்டு அதிர்ந்த வியாபாரிகள் கூடுதல் அவகாசம் தேவை என்றும் கூடுதலாக கடைகளை திறக்க அனுமதி கேட்டு அவரிடம் முறையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...