கோவையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் விசாரணைக்கு பின் விடுவிப்பு

கோவை: கோவையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.


கோவை: கோவையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவர் அப்பகுதியிலுள்ள இறைச்சி கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரும் சாய்பாபா காலனியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தோஷ் மற்றும் அவரது காதலி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அப்பெண்ணை தேடும் பணியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தோஷை தேடி அவரது நண்பர் விக்னேஷ் உள்ளிட்ட நண்பர்கள் கோட்டைமேடு பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களிடம் அப்பெண்ணின் உறவினரும் திமுக இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளருமான கோட்டை அப்பாஸ், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் அந்த பெண் குறித்து விசாரித்ததாக தெரிகிறது.

அப்போது, இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு விக்னேஷை கோட்டை அப்பாஸ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து செல்போனை பறித்து கொண்டதாக சந்தோஷ்குமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதனையடுத்து, விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு விசாரணைக்கு பின்னர் அவரை விடுவித்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...