வால்பாறை வியாபாரிகளுடன் நகராட்சி ஆணையாளர் ஆலோசனை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 1000க்கும் மேற்பட்ட பெரிய சிறிய கடைகள் உள்ளன. இந்த கடைகளின் சார்பாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினருடன் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் ஆலோசனை நடத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 1000க்கும் மேற்பட்ட பெரிய சிறிய கடைகள் உள்ளன. இந்த கடைகளின் சார்பாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினருடன் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் ஆலோசனை நடத்தினார்.



இந்த ஆலோசனையின் போது வால்பாறை நகராட்சி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் வால்பாறை வட்ட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும், கடைகளுக்குள் வரும் வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிய வற்புறுத்த வேண்டும், மேலும் பொருட்கள் வாங்குவோர் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் தவறும் கடை உரிமையாளர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நகராட்சி சார்பில் 1000 முக கவசங்களை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் செயலாளர் ஷாஜுவிடம் வழங்கினார்.



இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் சுகாதார ஆய்வாளர் ஜான்சன், வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ், செயலாளர் ஷாஜு, பொருளாளர் ஜேசுதாஸ், சௌந்தரபாண்டியன், பாபுஜி, சுரேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...