திருப்பூர்: திருப்பூரில் 3630 பேருக்கு நிவாரணம் வழங்கக் கோரி திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் 3630 பேருக்கு நிவாரணம் வழங்கக் கோரி திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூரில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இதுவரை ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் பலபேர் நிவாரணம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இன்னும் 3 ஆயிரத்து 630 பேருக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்கள் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.