கோவையில் அனைத்து இன்ஜினியரிங் தொழிற்சாலைகளையும் இயக்க அனுமதிக்க வேண்டும் - ஆட்சியரிடம் சிஐடியு இன்ஜினியரிங் சங்கம் மனு!

கோவை: அனைத்து இன்ஜினியரிங் தொழிற்சாலைகளையும் இயக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: அனைத்து இன்ஜினியரிங் தொழிற்சாலைகளையும் இயக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக் ஜெனரல் இன்ஜினியரிங் அன்டு மெக்கானிக்கல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-

கோவை மாவட்டம் தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஒன்றாகும். குறிப்பாக பெரிய, நடுத்தர, சிறு குறு மற்றும் பவுண்டரிகள் என இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் நிரந்தர தொழிலாளர்கள், அப்ரண்டீஸ், ட்ரய்னி, கேசுவல், கன்ட்ரெக்ட் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் என பல்வேறு கேட்டகிரியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்து இன்று வரை தொடர்கிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலத்திற்கு தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இன்று வரை எந்த நிறுவனங்களும் முழு ஊதியத்தை வழங்கவில்லை.

மேலும் ஊதியம் கொடுத்த நிறுவனங்களும் எப்போது வேண்டுமானாலும் திருப்பி பிடித்தம் செய்யும் வகையில் முன் பணமாகத்தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்திற்கான அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளத்தை வழங்க தமிழக அரசும், தொழிலாளர் துறையும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊராட்சி பேரூராட்சி பகுதிகளிலும் நகரத்தின் பல பகுதிகளிலும் ஏற்றுமதிக்கான பொருள்கள் உற்பத்திக்கான நிறுவனங்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனைத்து பகுதியிலும் உள்ள தொழிற்சாலைகள் இயக்க அனுமதித்து தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை உத்தரவாத வேண்டுகிறோம். பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் வழங்கப்படும் டீ அல்லது காபி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் இன்ஜினியரிங் சங்க தலைவர் வி்.பெருமாள், பொது செயலாளர் சி.துரைசாமி ஆகியோர் மனு அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...