கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு ௧கவச உடைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு ௧கவச உடைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி, வி.பி.கந்தசாமி, ஓ.கே.சின்னராஜ், வி.கஸ்தூரி வாசு, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளர்கள் 1000 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகளையும், மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், இதர பணியாளர்கள் 7500 பேருக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் பேசியதாவது:
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், அறிவுரையின் படியும், கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகள், நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டத்திலும், மாநகராட்சியிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பில்லாத நிலையை உருவாக்கிட அனைத்து அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் அயராது பணியாற்றி வருகின்றனர். அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து ஊக்கமுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிவதையும் மற்றும் சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி ஆணையர்கள் சுந்தர்ராஜன் (பணியமைப்பு), அண்ணாதுரை (வருவாய்), மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார்ரத்தினம், டி.ஆர்.ரவி, மகேஷ்கனகராஜ், ஏ.ஜே.செந்தில்அரசன், செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், உதவி நகர் நல அலுவலர் எஸ்.வசந்த் திவாகா் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.