கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் யாருக்கும் இன்று கொரோனா தொற்று இல்லை; தமிழகத்தில் 669 பேருக்கு தொற்று உறுதி
கோவை: தமிழகத்தில் இன்று,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7204 ஆக அதிகரித்துள்ளது. இன்று, மே 10 மட்டும் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூரில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது மக்களுக்கு பெரும் நிம்மதியை உருவாகியுள்ளது. ( கோவை -146; திருப்பூர் -114; நீலகிரி - 14).
இதுவரை தமிழகத்தில் 1959 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று, சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 232,368 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.