வால்பாறையில் தொடரும் சிறுத்தை புலிகளின் அட்டகாசம்; மாடு பலி

வால்பாறையில் தொடரும் சிறுத்தை புலிகளின் அட்டகாசம்; மாடு பலி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளமாணிக்காஎஸ்டேட்பகுதியில் சிறுத்தைப்புலிகள் அடித்து மூன்று மாடுகள் பலியாகி உள்ளது. 

இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட்டில் வனராஜ் என்பவரின் மாடு மேய்ச்சலுக்கு சென்று விட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போய்விட்டது. வனராஜும் நண்பர்களும் இரண்டு தினங்களாக மாட்டை தேடி வந்தனர். 

இந்நிலையில் வால்பாறை கருமலை நெடுஞ்சாலையில் உள்ள தேயிலை தோட்டம் 11ல் மாடு இறந்து கிடந்தது தெரிய வந்தது. மூன்று வயதுடைய சினை மாட்டை புலி கொன்று தின்றுள்ளது தெரிய வந்தது. 

வால்பாறை வனச்சரக வனவர் பிரபாகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மாட்டை உடல் கூறு ஆய்வுக்கு ஏற்பாடு செய்தார். மேலும், வனத்துறையினர் புலியின்நடமாட்டம் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். வால்பாறை பகுதியில் சிறுத்தை ப்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...