கோவை: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேர் சிறப்பு ரயில் 06107 மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேர் சிறப்பு ரயில் 06107 மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவையில் கொரோனா தொற்றால் தொழில்கள் யாவும் முடங்கியுள்ள சூழலில் வேலை இல்லாமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்த வட மாநிலத் தொழிலாளர்களை அந்தந்த ஊருக்கு அனுப்பும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேரைக் கோவை மாவட்ட நிர்வாகம் தனது சொந்த செலவில் சிறப்பு ரயில் மூலம் டிக்கெட் எடுத்து கொடுத்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
காவலர்கள் உதவியோடு ரயில் நிலையம் அழைத்து வந்து உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து 22 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் தனி மனித இடைவெளியுடன் அமர வைத்து உணவு, தண்ணீர், முககவசம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு முதல் சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணிக்கு பீகாருக்கு இரண்டாவது ரயிலும் புறப்பட்டுச் சென்றது. தற்போது 4.10 மணிக்கு மூன்றாவது சிறப்பு ரயில் கோவையில் இருந்து கிளம்பியது. மேலும் இன்று இரவு 8 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்பட உள்ளது.