திருப்பூர்: தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பு என திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பு என திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதுமே கடந்த 10 தினங்களாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பு எனவும், கடந்த மாதம் 29 ஆம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டும் இதுவரை திருப்பூருக்குள் இருக்கும் புலம்பெயர்ந்து தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஒரு ரயில் கூட வரவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து பலமுறை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் முறையான பதில் இல்லை என தெரிவித்த அவர், போராடுகின்ற வடமாநில தொழிலாளர்களை அடிப்பதற்கு காவல்துறைக்கு யார் உரிமை கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இந்த போராட்டமே மத்திய மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவும் ஆளுகின்ற உரிமையை இழந்து விட்ட மத்திய மாநில அரசுகள் பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.