கோவையில் டாஸ்மாக் கடையின் மேற்புற ஓடுகளைப் பிரித்து மதுபானம் திருட முயற்சி - போலீசார் விசாரணை

கோவை: கோவையில் டாஸ்மாக் கடையின் மேற்புற ஓடுகளை பிரித்து மதுபானங்களை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் டாஸ்மாக் கடையின் மேற்புற ஓடுகளை பிரித்து மதுபானங்களை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மதுபான கடைகள் திறக்கப்படாது என டாஸ்மாக நிர்வாகம் அறிவித்தது. இதனால் மதுப் பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் கோவை செல்வபுரம் சாலை செட்டி வீதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை (1672) மேற்புறத்தில் உள்ள ஓடுகளைப் பிரித்து இளைஞர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றுள்ளார். இதனை கண்ட நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, மதுபானக் கடைக்குள் இறங்க முயற்சித்த நபர் பின் வழியாக குதித்து தப்பி ஓடினார். தகவல் கிடைக்கப் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் ஸ்ரீ ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் மதுபானக் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது மது பாட்டில்கள் ஏதும் திருடப்படவில்லை என தெரியவந்தது.

மது பாட்டில்கள் திருட வந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.



இதனையடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் அக்கடைக்கு வெல்டிங் மூலம் சீல் வைத்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...