உலக தலசீமியா(இரத்த அழிவு சோகை) தினத்தை முன்னிட்டு கோவையில் சக்ஷம் அமைப்பின் சார்பில் இரத்ததான முகாம்

கோவை: உலக தலசீமியா( இரத்த அழிவு சோகை) தினத்தை முன்னிட்டு கோவையில் சக்ஷம் அமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.


கோவை: உலக தலசீமியா( இரத்த அழிவு சோகை) தினத்தை முன்னிட்டு கோவையில் சக்ஷம் அமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளை ஆண்டுதோறும் பாதிப்புக்குள்ளாக்கி வரும் மரபணு நோயான "தலசீமியா" என்ற "இரத்த அழிவு சோகை" நோயிலிருந்து விடுபெற உலக தலசீமியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த தலசீமியா நோயானது புரத கட்டமைப்பில் குறைபாடுகளை ஏற்படுத்தி, உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்த நோய் பாதித்த குழந்தைகள் 2 வயதிலேயே ரத்த சோகையால் மரணிக்கின்றனர்.

தலசீமியா மைனர் கொண்ட நோயாளிகளுக்கு பொதுவாக தனிமுறை சிகிச்சைகள் தேவைப்படாது. ஆனால், தலசீமியா மேஜர் கொண்ட நோயாளிகளுக்கு நீடித்த காலமான இரத்த ஏற்றுதல், பிணி நீக்கல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

அதேபோல, இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ரத்தம் தேவைப்படுகிறது. மேலும் கோவையை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுமார் 62 நபர்களுக்கு மேல் இந்த நோய் பாதிப்பில் உள்ளனர்.



இந்த நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக இரத்தம் தேவைப்படுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு சக்ஷம் அமைப்பின் சார்பில் இந்திய மருத்துவ சங்கம் கட்டிடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.



தொடர்ந்து 15 நபர்கள் இன்று இரத்த தானம் வழங்கினர்.



இதையடுத்து, இந்த நோய்க்காக கொடையாளர்கள் தொடர்ந்து ரத்த தானம் வழங்க வேண்டும் எனவும் இந்த மரபுவழி நோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் தேவ கோவிந்த்ராஜ், சக்ஷம் மாவட்ட தலைவர் பிரபு, மாநில பொருளாளர் ரமேஷ், இளைஞரணி அமைப்பாளர் சண்முகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...