ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குன்னூர் நகர பாஜக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

நீலகிரி: குன்னூர் நகர பாஜக சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு மாசாணியம்மன் கோயில் நிர்வாகிகளுடன் சேர்ந்து 43வது நாளாக மூன்று வேலை உணவு வழங்கும் நிகழ்ச்சி அதன் தலைவர் குங்குமராஜ் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


நீலகிரி: குன்னூர் நகர பாஜக சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு மாசாணியம்மன் கோயில் நிர்வாகிகளுடன் சேர்ந்து 43வது நாளாக மூன்று வேலை உணவு வழங்கும் நிகழ்ச்சி அதன் தலைவர் குங்குமராஜ் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் உணவு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கடந்த 43 நாட்களாக வழங்கி வருகின்றனர். காலை, மதியம், இரவு என்று பல்வேறு கிராமப் புறங்கள் நகரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோயில் நிர்வாகி சுதர்சன், ஆனந்த், முரளி, ரகு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். இதேப் போன்று மாவட்ட பாஜக சார்பில் பொது மக்களுக்கு காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருட்களை மாவட்ட செயலாளர் பாபண்ணன் தலைமையில் காட்டேரி, ஹைபீல்டு, வண்ணார் பேட்டை, உள்ளிட்ட நகரில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் 100 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் தேவைக்கேற்ப இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும்,144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை பொதுமக்களுக்கு இதுபோன்ற இலவச உதவிகள் வழங்கப்படும் என பாஜக மாவட்ட செயலாளர் பாபண்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...