கொரோனா பரிசோதனை செய்த பின்னரே மாநிலத்திற்குள் அனுமதி..! கோவை ரயில் நிலையத்திலிருந்து வேதனையுடன் திரும்பி சென்ற ஒரிசா மாநில தொழிலாளர்கள்!

கோவை: ஒரிசா மாநிலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் கொரொனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்புதான் வர வேண்டும் என்ற அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவால் அம்மாநிலத்தவர்கள் கோவை ரயில் நிலையத்திலிருந்து திரும்பி சென்றனர்.


கோவை: ஒரிசா மாநிலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் கொரொனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்புதான் வர வேண்டும் என்ற அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவால் அம்மாநிலத்தவர்கள் கோவை ரயில் நிலையத்திலிருந்து திரும்பி சென்றனர்.

கொரொனா எதிரொலி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவையில் பணிபுரிந்து வரும் வட மாநிலத் தொழிலாளர்கள், தங்களது ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கடந்த நான்கு நாட்களாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவையிலிருந்து ஒரிசா செல்ல ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வட மாநிலத்தவர்களுக்கு தகவல் சொல்லியுள்ளனர். இதனையடுத்து கோவை வடக்கு தாலுக்காவில் 400 பேரும், சூலூரில் 450 பேரும், அன்னூரில் 290 பேர் என மொத்தமாக 1140 பேர் ரயில் நிலையத்தித்கு பெட்டி படுக்கைகளோடு வந்துள்ளனர். ஆனால், அவர்களிடம் கடைசி நேரத்தில் ஒரிஸா அரசு அனுமதியளிக்கவில்லை எனக்கூறி அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ரயில் நிலையத்திலும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் காத்திருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணிக்கு ரயில் கிளம்பும் என்ற நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் கேட்ட போது, ஒரிசா மாநில உயர்நீதிமன்றம் மற்ற மாநிலங்களில் இருந்து ஒரிசாவிற்கு வரும் அம்மாநில மக்கள் கட்டாயம் கொரொனா தொற்று இல்லை என பரிசோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்க வேண்டும் என இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதனையடுத்து 1140 பேருக்கும் உடனடியாக கொரொனா தொற்று இருக்கிறதா என்பதற்கான, பரிசோதனையை செய்ய முடியாததால், அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த பின்னரும் ஒரிசா உயர்நீதிமன்ற உத்தரவால் அம்மாநில மக்கள் சொந்த ஊருக்கு செல்வது தாமதமாகி வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...