கோவை: வால்பாறையில் 44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மதுவை வாங்கி சென்றனர்.
கோவை: வால்பாறையில் 44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மதுவை வாங்கி சென்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 5 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில் கொரானா காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் அடைக்கப்பட்டன. இதேபோல் வால்பாறையிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதன் காரணமாக குடிமகன்கள் மது கிடைக்காமல் மிகுந்த கஷ்டப்பட்டு வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது.
இதன்படி வால்பாறை நகரில் உள்ள இரண்டு கடைகள் திறக்கப்படாமல் ரொட்டிக்கடை, முடீஸ், மற்றும் சோலையார் அணை பகுதிலுள்ள மூன்று கடைகளும் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து குடிமகன்கள் 40 நாட்களுக்கு பின் சரக்கு கிடைத்த மகிழ்ச்சியில் வால்பாறையிலிருந்து ரொட்டிக்கடைக்கு 6 கிலோ மீட்டர் நடந்து வந்து ஆளுக்கு 4 குவார்ட்டர் 6 குவார்ட்டர் என விருப்பப்பட்டபடி வாங்கி சென்றனர்.
வால்பாறை காவல்துறையினர் குடிமகன்களை சமூக விலக்கை கடைபிடித்து மது வாங்க வைத்தனர். டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது குடிமகன்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.