மதுக்கடையை திறக்காதே! கொரோனாவை அழைக்காதே! கோவையில் பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

கோவை: மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்கிட வேண்டும், வேலையின்றி, வருவாயின்றி வீட்டில் முடங்கி கிடக்கும் உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச இருப்பைக்கூட பறிப்பதற்கு மதுக்கடைகளை திறந்துவைத்த மாநில அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...