கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழுவினர் மீது மலர் தூவி பாராட்டு தெரிவித்த தன்னார்வலர்கள்!

கோவை: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவம் அளித்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் மலர்கள் தூவி பாராட்டுக்களை தெரிவித்தனர்.


கோவை: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவம் அளித்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் மலர்கள் தூவி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு தொற்றினால் அனுமதிக்கப்பட்ட 146 பேரில் 141 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த மருத்துவமனையில் 4 பேர் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படி சிறந்த முறையில் சிகிச்சை அளித்த இந்த மருத்துவமனை குழுவினருக்கு பல தரப்பினர் தொடர்ந்து பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், இன்று ஆத்மா அறக்கட்டளை, இமயம் அரிமா சங்கம், மற்றும் ருதம்பிரா அறக்கட்டளை சார்பில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி காண்போர் நெஞ்சை நெகிழ்ந்தது.

இதுகுறித்து ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் கூறும்போது;-

இந்த கொடிய வைரசை எதிர்த்து போராடும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவ குழுவினருக்கு மலர்தூவி வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் தொடர்ச்சியாக இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகிறோம். தொடர்ந்து அவர்களை கௌரவிக்க நாங்கள் காத்திருக்கிறோம். அவர்களின் பணி உயர்வுக்கும் பெருமைக்கும் உரியது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மருத்துவ கண்காணிப்பாளர் ரவி, தன்னார்வலர்கள் நந்தகுமார், கந்தவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...