கோவை: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வாளையாறு சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது.
கோவை: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வாளையாறு சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக - கேரளா எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகள் கடந்த 35 நாட்களாக முழுமையாக மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து எடுத்துச் செல்லும் வாகனம் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், மே 4ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இ-பாஸ் எடுக்கும் பொதுமக்கள் சோதனைக்கு பின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைகள் நடத்தப்படுவதால் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையாக நிற்கிறது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் இருந்து வரும் வாகன ஒட்டுனர்களின் விபரங்கள் மற்றும் முறையான அனுமதி சீட்டுகள் பெறப்பட்ட பிறகு அனுமதிக்க படுகின்றன. சென்னை போன்று கொரோனா பரவல் நிலையை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.