கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிப்பு..! கோவையில் 37 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!

கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்துள்ள தமிழக அரசு கோவையில் 37 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்து உள்ளது.


கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்துள்ள தமிழக அரசு கோவையில் 37 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்து உள்ளது.

கொரோனா என்பது ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு எளிதாக பரவக்கூடியது. அதாவது தும்மல், மற்றும் இருமல் மூலமாக 20 சதவீதம் குறைவாகவும், பாதிக்கப்படும் நபர்கள் தொடும் பொருட்கள் மூலம் 80 சதவீதத்துக்கு மேல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பாதிக்கப்படும் நபர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த 2ம் தேதி வரை தமிழகத்தில் 711 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் அரசாணையில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் வசித்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டு வரப்படுகிறது. அந்த பகுதிகளில் வசிக்கும் நபர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

நகர்பகுதிகள் என்றால் அந்த தெரு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளுக்குள் வெளி நபர்கள் செல்வதை தடுக்கவும், யாரும் வெளியே செல்வதை தடுக்கவும் தடுப்பு வைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் அந்த பகுதிகளில் 28 நாட்கள் வரை கட்டுப்பாடு இருக்கும். மருத்துவ அதிகாரிகளால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும். கடைசி நோயாளி வரை பரிசோதனையில் நெகட்டிவாக இருக்க வேண்டும். நோயாளி கண்டறியப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது. அதுவரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தான் இருக்கும். தமிழகம் முழுவதும் தற்போது வரை 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவை மாவட்டத்தில் 37 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆனைமலை, பொள்ளாச்சி, கே.கே.புதூர், திருமறை நகர் 1, திருமறை நகர் 2, கருப்பராயன் கோவில் வீதி, ஆடிட்டர் வீதி, அம்மன் நகர், சாய் நகர், மதுக்கரை, போத்தனூர் 1, போத்தனூர் 2, வசந்தம் நகர், தியாகராய வீதி, அன்னூர், சிரியன் சர்ச் 1, சிரியன் சர்ச் 2, மேட்டுப்பாளையம், ராமச்சந்திரா ரோடு, ஜெயின் மஹோர் அப்பார்ட்மெண்ட் 1, ஜெயின் மஹோர் அப்பார்ட்மெண்ட் 2, கஸ்தூரி கார்டன், கோவை கார்டன், PN பாளையம், கிணத்துக்கடவு, சிறுமுகை, சாவித்திரி நகர், ரோஸ் கார்டன், பரத் நகர், மீனாட்சி நகர், அம்பேத்கர் காலனி, ஜீ.எம் நகர் 1, ஜீ.எம் நகர் 2, ஜீ.எம் நகர் 3, சிஎம்சிஹெச், சிடிஎம் ஹோம், காந்திபார்க் ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...