கோவையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 55,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக இல்லாத அளவு நேற்றையதினம் 527 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் நிலை என்று சொல்லக்கூடிய சமூக பரவலுக்கு உள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதிலும் மதுபான கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. நேற்றைய தினம் மதுபான கடைகளை திறந்த டில்லி, மஹாராஸ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சமூக இடைவெளி பராமரிக்கப்படாமல் பல கிலோ மீட்டர் தூரம் மது வாங்க மதுக்கடைகளை திறக்கும் முன்னரே வரிசையில் நின்றிருந்தனர். பல இடங்களில் காவல் துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளது.

இந்த நிலையில், நாளை முதல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது எனவும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து இருப்பதால் தமிழக மக்கள் பக்கத்து மாநிலத்திற்கு எல்லை தாண்டி போய் மது வாங்கி வருவதாகவும் எல்லையில் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே, தமிழகத்தில் மதுபான கடைகளை திறப்பதாக அரசு அறிவித்திருப்பது கேலிக்கூத்தானது. மாநில எல்லை தாண்டுபவர்களை கட்டுப்படுத்த முடியாத அரசு, தமிழகத்திலுள்ள 7000 டாஸ்மாக் கடைகளில் எப்படி சமூக இடைவெளியை பாதுகாக்கும்? 40 நாட்களாக எந்த தொழிற்சாலைகளும் திறக்கப்படாமல் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கிறது. சாதாரண ஏழை எளிய கூலி தொழிலாளிகள் வேலை கிடைக்காமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாதாரண ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க வேண்டிய தமிழக அரசோ அதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன்? ஊரடங்கு காலத்தில் குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையமும், மாநில மகளிர் ஆணையமும் அறிக்கை வெளியிட்டிருந்தன.

மதுபானம் கிடைக்காமலேயே இத்தனை வன்முறைகளை எதிர்கொண்ட பெண்கள் டாஸ்மாக் கடைகள் திறப்பதால் இன்னும் பல மடங்கு குடும்ப வன்முறைகள் சந்திக்க நேரிடும் என்பதை ஜனநாயக மாதர் சங்கம் சுட்டி காட்டுகிறது.



எனவே, தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் கடைகளை திறப்பதை இச்சமூக நலன் கருதி நிறுத்தி வைக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...