வணிகர் தினத்தை முன்னிட்டு வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கொரானா களப்பணியாளர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் மே 5 ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சங்க தலைவர் ஜெபராஜால், சங்க அலுவலகத்தில் சங்க கொடியேற்றப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மே 5 ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சங்க தலைவர் ஜெபராஜால், சங்க அலுவலகத்தில் சங்க கொடியேற்றப்பட்டது. 

தொடர்ந்து, 70 ஆதிவாசி குடும்பங்களுக்கு மளிகை அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது. மேலும், கொரானா தடுப்பு பணிகளில் களத்தில் இருந்து பணியாற்றும் மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள்.

வருவாய்துறையினர், நகராட்சி பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஊடகத் துறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக இன்று மதியம் 250 பேர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. 

வால்பாறை நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் உணவு வழங்கி பாராட்டினார். 

இந்நிகழ்வில் வால்பாறை வட்டார வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ், செயலாளர் ஷாஜி ஜார்ஜ், பொருளாளர் ஏசுதாசன், நிர்வாகிகள் பேபி, ஜிபுதாமஸ், ரவி, மோகன், ராஜா, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...