திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்கப்படும் எனவும் தொழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நாளை முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் செயல்படலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொழில்துறை அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் தொழில் துறை மீண்டும் நல்ல முறையில் செயல்படும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொழில் துவங்கும் தொழில் துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட உள்ளதாகவும் அதன் மூலம் தொழில்துறையினர் குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.
மேலும், திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்க உள்ளதாகவும் அதன் மூலம் ஒரு நாளைக்கு 210 பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறையினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.