தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா..! கோவை, திருப்பூரில் பாதிப்பு இல்லை. நீலகிரியில் 4 பேருக்கு தொற்று உறுதி

கோவை: தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது.



கோவை: தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதுதொடர்பாக, இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 508 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று, கோவையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உள்ளது. இதில், 4 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, திருப்பூரில் புதிதாக இன்று பாதிப்பு ஏதும் இல்லை. இதனா‌ல், திருப்பூரில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. இதில், 2 பேர் கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேசமயம், நீலகிரியில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனா‌ல், நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1485 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...