கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 300 ஏழை மக்களின் குடும்பங்களுக்கு மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் 53வது வார்டு, பீளமேடு பகுதிக் கழகம், சித்தாபுதூர், ஜவகர் நகர், அண்ணா நகர், ராயர் நகர், கே.கே.நகர் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 300 ஏழை மக்களின் குடும்பங்களுக்கு மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள், தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, வட்டக் கழகச் செயலாளர் மு.சசிகுமார், பகுதி துணைச் செயலாளர் மா.நாகராஜ், தொண்டரணி கண்ணன், தம்பு, விஜி, ஸ்ரீ பிரியா, மாணிக்கம், ராஜேஷ், காளிதாஸ், மோகன், ஜனா, பிரசாந்த், முத்துசாமி, பழனிச்சாமி வாத்தியார், கவிதா, இன்பசேகர், ஆனந்த், அக்ரி பாலு, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.