தடையை நீக்கி ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் - கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் கோரிக்கை

கோவை: தற்போது உள்ள தடையை நீக்கி ஆட்டோக்கள் அனைத்தையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: தற்போது உள்ள தடையை நீக்கி ஆட்டோக்கள் அனைத்தையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 43 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு 1000 ரூபாயும் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு இரு தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதில் நலவாரியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களில் பலருக்கு பணம் கிடைக்க பெறவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ பர்மிட் எடுத்துள்ள அனைவருக்கும் 15,000 ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 5000 வழங்கிட வேண்டும் எனவும் தற்போது உள்ள தடையை நீக்கி ஆட்டோக்கள் அனைத்தையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...