திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்பம் பரிசோதனை செய்யும் இயந்திரத்தை பொருத்தியுள்ளது.

பல்வேறு அரசு சேவைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள் இந்த இயந்திரம் வழியாக செல்லும்போது அவர்களின் உடல் வெப்பம் குறித்த பரிசோதனை கணக்கிடப்பட்டு தெரியப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.