சுற்றுலா பயணிகள் உணவு கொடுத்து பழகியதால் வாகனங்களை பார்த்து உணவிற்காக ஏங்கி நிற்கும் குரங்குகள்..!

கோவை: சுற்றுலா பயணிகள் உணவு கொடுத்து பழகியதால் வாகனங்களை பார்த்து உணவிற்காக குரங்குகள் ஏங்கி நிற்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: சுற்றுலா பயணிகள் உணவு கொடுத்து பழகியதால் வாகனங்களை பார்த்து உணவிற்காக குரங்குகள் ஏங்கி நிற்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அப்பகுதியில் இருக்கும் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதனை பழக்க படுத்திய காரணத்தால் குரங்குகளும் காடுகளில் கிடைக்கும் இயற்கை உணவு பழக்கத்தை மறந்து தின்பண்டங்களை உணவாக பழகிக்கொண்டுள்ளது.

தற்போது ஊரடங்கு காலகட்டத்தில் வாகனங்கள் அதிகம் செல்லாத மலைப்பாதைகளில் ஆங்காங்கே சாலையில் நிற்கும் குரங்குகள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்காக செல்லும் ஒரு சில வாகனங்களைப் பார்த்து தங்களுக்கு உணவளிப்பார்களா என்று ஏங்கி நிற்கும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன.

சாதாரண நாட்களில் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் உணவு வகைகளை ஆங்காங்கே சாலைகளில் வீசி செல்வதால் அதை தின்பதற்காக குரங்குகள் காட்டு பகுதிக்குள் தங்களுக்கு கிடைக்கும் உணவு வகைகளை விட்டுவிட்டு சாலையோரங்களில் படையெடுக்க ஆரம்பிக்கின்றன. அவ்வாறு சுற்றி திரியும் போது சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது போன்று உணவுகளைக் குரங்களுக்கு செயற்கையாக கொடுத்து பழக்கியதால் காட்டுக்குள் தங்களுக்கு கிடைக்கும் பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை பல கிலோ மீட்டர் சென்று தேடி உண்ணும் பழக்கங்களைக் கைவிட்டு தற்போது சாலையோரங்களில் பசியோடு காத்து நிற்கும் அவலநிலை உள்ளதாகவும், இனிமேலாவது சாலையை வாகனங்களில் கடக்கும் சுற்றுலா பயணிகள் உணவு பொருட்களை சாலையோரங்களில் குரங்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...