குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் “ஊரடங்கு” என்ற மூச்சுத்திணறலில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலனை செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் “ஊரடங்கு” என்ற மூச்சுத்திணறலில் இருந்து மீண்டு, தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பினை வழங்கிட அந்நிறுவனப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் “ஊரடங்கு” என்ற மூச்சுத்திணறலில் இருந்து மீண்டு, தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பினை வழங்கிட அந்நிறுவனப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அறிக்கை வெளியிட்டுள்ளார். 

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய கேந்திரங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், கோவை, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்று அடுத்தடுத்து சோதனைகளைச் சந்தித்து, தற்போது கொரோனா நோய் பேரிடரைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக முற்றிலும் நிலை குலைந்து நிற்கின்றன.

இந்நிலையில், இன்றைய தினம் (4.5.2020) மாநிலம் முழுவதும் உள்ள இந்தத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த கூட்டமைப்புத் தலைவர்கள், மற்றும் பிரதிநிதிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி - அவர்கள் சந்திக்கும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் குறித்தும் - பிரச்சினைகளிலிருந்துமீள்வதற்கான ஆலோசனைகள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தேன்.

இந்த நிறுவனங்களின் சார்பாகப் பங்கேற்ற ஒவ்வொரு பிரதிநிதியும் எடுத்து வைத்த கருத்துகள், ஆலோசனைகள், கோரிக்கைகள் மூலம், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்க்கு நேரடியாகவும், அதற்கு மேலும் பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும், வேலை வாய்ப்பையும் - வாழ்வாதாரத்தையும் வழங்கும் இந்தத் துறை தற்போது எத்தகையை பேரிடரில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் “ஊரடங்கு” என்ற மூச்சுத்திணறலில் இருந்து மீண்டு - தொழில்களைத் தொடங்கிடவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை மீண்டும் தொய்வின்றி வழங்கிடவும் - மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக முன்னெப்போதும் போல் விளங்கிடவும், பின்வரும் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

- தொழிலை மீண்டும் தொடங்கவும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் இந்த நிறுவனங்களின் நடைமுறை மூலதனம் (Working Capital) மற்றும் ரொக்கக் கடன் (Cash Limit) வழங்கும் வரம்பை 25 சதவீதம் உயர்த்தி, குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.

- கேரளாவில் வழங்கியது போல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), 1 முதல் 2 சதவீதம் இந்நிறுவனங்களுக்கு நிவாரண உதவிகளாக (Relief grant) அறிவிக்க வேண்டும்.

- மூன்று மாதங்களுக்குப் பிறகு மாதாந்திர கடன் தவணைகளைச் செலுத்தினால் போதும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தாலும், அந்த மாதங்களுக்குரிய வட்டியைக் கட்ட வேண்டுமென்று தனியார் வங்கிகள் வற்புறுத்துகின்றன. ஆகவே, ரிசர்வ் வங்கி உத்தரவைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்கவும், கடன் தவணை செலுத்துவதை 6 மாதத்திற்குத் தள்ளி வைக்கவும், செயல்படாச் சொத்து (NPA) அளவுகோலைத் தளர்த்திடவும் வேண்டும்.

- இந்நிறுவனங்களின் ஊழியர்கள் தொழிலாளர்கள் பணிக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டுகளை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளோ வழங்கிட வேண்டும்.

- மின்கட்டணம், தண்ணீர்க் கட்டணம், மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்துவதை ஆறு மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்; இந்த சேவைகளுக்கான வைப்புத் தொகையையும் குறைக்க வேண்டும்.

- ஆறு மாதங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூலைத் தள்ளிவைப்பதோடு - அந்த பாக்கியை இரு வருடங்களில்மாத தவணையில் செலுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

- இத்தொழில் துறைக்கு உயிரூட்ட, கடந்த வருடத்தில் செலுத்திய சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து 10 சதவீதத்தை அந்தந்த நிறுவனங்களுக்குத் திருப்பி வழங்க வேண்டும்.

- 10 லட்சம் ரூபாய் வரை உள்ள “பருவம்சார் கடன்”-களுக்கு வட்டி கட்டும் கால அவகாசத்தை நீட்டித்துக் கொடுக்க வேண்டும்.

-ஊரடங்கிற்குப் பிறகு இந்த நி

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...