கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் புதிதாக யாருக்கும் இன்று கொரோனா பாதிப்பு இல்லை!

கோவை: தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்துள்ளது.

கோவை: தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்துள்ளது. 

அதேசமயம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 146 ஆக உள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. நீலகிரியில் 9 பேர் கொரோனா இன்று வரை தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர். 

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 9 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 527 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் இதுவரை 1409 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...