வெளி ஆட்கள் யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு வர அனுமதியில்லை - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்

நீலகிரி: வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் அதேப்போல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் உதகை, குன்னூர், கோத்தகிரியில் சில கடைகள் திறந்திருக்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்.



நீலகிரி: வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் அதேப்போல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் உதகை, குன்னூர், கோத்தகிரியில் சில கடைகள் திறந்திருக்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்.

உதகையில் வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆட்சியர் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர்:-

சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் அதற்கு கடை உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், வரும் புதன் முதல் கடைகள் திறக்க அனுமதி வழங்கபட்டுள்ளது என தெரிவித்தார். 

அவ்வாறு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்த ஆட்சியர், பொதுமக்கள் முக கவசம் இன்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தினார். 

இவற்றை கண்காணிக்க, பறக்கும் படையினர் நியமிக்கபட்டுள்ளனர், விதிமுறைகளை மீறும் மக்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். 

நீலகிரியில் 585 லாரி ஓட்டுநர்கள் காய்கறிகளை எடுத்து பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர். ஊட்டியிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த 43 பேரில் 39 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது, அவர்களது முடிவுகள் இன்னும் வரவில்லை. 

வெளி ஆட்கள் யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு வர அனுமதியில்லை. அவ்வாறு, மிகவும் முக்கிய காரணத்திற்காக வரும் பொதுமக்கள் 14 நாட்கள் தனிமை படுத்தபடுவார்கள். இறப்பு, திருமணம், மருத்துவம் போன்ற காரணத்திற்கு மட்டும் ஆன்லைனில் தொடர்பு கொண்டு அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம். 

அனுமதி இல்லாமல், அரசுக்கு தெரியாமல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் ஆட்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு தகவல் கொடுக்க வேண்டும். மாவட்ட எல்லைகளில் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், கொரோனா தொற்று குறித்து வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார். 

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...