தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகளின்‌ தொடர்ச்சியாக, அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ கள ஆய்வுக்குழு நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகளின்‌ தொடர்ச்சியாக, அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ கள ஆய்வுக்குழு நடைபெற்றது.

கள ஆய்வுப்பணி அலுவலர்கள்‌ மற்றும் இயக்குநர்‌, புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை.எ.சரவணவேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, சிட்கோ மேலாண்மை இயக்குநா்‌ ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர்‌ தலைமையில்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌, மாநகராட்சி ஆணையாளா்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌, ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, மாநகராட்சி துணை ஆணையாளா்‌ ச.பிரசன்னாராமசாமி அவர்கள்‌, மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.




இக்கூட்டத்தில்‌, கள ஆய்வுக்குழு அலுவலர்கள்‌ தெரிவித்ததாவது:-




கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகளை போர்க்கால அடிப்படையில்‌ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ அரசு ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்‌.

இப்பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்‌. மேலும், காவல்துறையினர்‌, மற்றும்‌ பணிகளில்‌ உள்ள அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌, பொதுமக்கள்‌ அனைவரும்‌ தவறாது முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌. முகக்கவசம்‌ அணியாதவர்கள்‌ மீது அபராதம்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

மேலும்‌, மாநகராட்சியிலுள்ள 12 அம்மா உணவகங்களில்‌ மற்றும்‌ மார்க்கெட்களில்‌ சமூக இடைவெளியை அனைவரும்‌ தவறாது கடைபிடிக்க வேண்டும்‌. பொதுமக்கள்‌, வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை தவறாது மேற்கொள்ள வேண்டும்‌.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ கிருமி நாசினியினை தினசரி 3 முறை தெளிக்கும்‌ பணிகளையும்‌, மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ தீவிரமாக தூய்மைப்‌ பணிகளை மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ கள ஆய்வுக்குழு அலுவலா்கள்‌ தெரிவித்தார்கள்‌.

இக்கூட்டத்தில்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ (முத்திரைத்தாள்‌) ப.காந்திமதி, மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ கலால்‌) எம்‌.எஸ்‌.கலைவாணி, நகர்‌ நல அலுவலர்‌ மரு.சந்தோஷ்குமார்‌, காவல்துறை உதவி ஆணையர்‌ ரமேஷ்பாபு, துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌ என்‌.பிரேமானந்தன்‌, துணை இயக்குநா (சுகாதாரம்‌)‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...