ஊரடங்கு தளர்த்தபட்ட நிலையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

கோவை: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டு இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் கட்டுமான பொருட்கள், கால் செண்டர், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானம், உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கபட்டு உள்ளது.


கோவை: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டு இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் கட்டுமான பொருட்கள், கால் செண்டர், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானம், உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கபட்டு உள்ளது.

கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தபட்டு இருந்த நிலையில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணபட்டது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இன்று காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி கோவை மாவட்டம் முழுவதும் உள்ள தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள் சார்பில் பொதுமக்கள் சென்றுவரும் மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட்டுகள், பேருந்து நிலைய பகுதிகள், பொதுச் சாலைகள், கடைவீதிகள் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களின் மூலம் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.

காலை 5 மணி முதல் 9 மணி வரை கிருமிநாசினி தெளிக்கும் பணி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...