வால்பாறையில் காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை!

கோவை: வால்பாறையில் காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்நிலையில் முடீஸ் குரூப் நிர்வாகத்திற்குட்பட்ட முத்துமுடி தேயிலை தோட்டத்தில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். 



இதனை தொடர்ந்து வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த காட்டு யானையை பார்வையிட்டனர். தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை மருத்துவர் சுகுமார் யானையின் உடல் கூறு ஆய்வு மேற்கொண்டார். 



காட்டு யானையின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இறந்த யானையின் உடலின் முக்கிய பாகங்கள் சேகரிக்கப்பட்டு கோவை வன உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பெண் யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும் நோயினால் இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். 

மேலும் இந்த யானை சில நாட்களுக்கு முன் கேரள பகுதியிலிருந்து வந்துள்ளதாக தெரிவித்த வனத்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...