கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வருமானம் இல்லாததால் கேரளாவில் இருந்து வட மாநிலத்திற்கு தொழிலாளர்கள் சைக்கிளில் பயணித்து செல்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக அனைத்து போக்குவரத்தும் முடங்கி உள்ளது. இந்நிலையில் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல் பணிபுரியும் இடத்திலேயே முடங்கி உள்ளனர்.
சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு சிலர் பல நூறு மைல் தூரம் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு செல்ல முயல்கின்றனர். அந்த வகையில் உத்தரப்பிரதேசம் அலிகார் பகுதியைச் சேர்ந்த ஜியேந்தர சிங், மோகன் சர்மா, அஜித் சிங், தேவேந்திர சிங் ஆகியோர் சைக்கிளில் சொந்த ஊர் முயன்றனர்.
கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் கல்லுடைக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் இந்த நான்கு பேரும் கடந்த ஒரு மாதமாக எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் வருமானம் இன்றி தவித்து வந்து உள்ளனர். மேலும் வீட்டு வாடகை கொடுக்கவும், உணவுக்கும் பணம் ஏதும் இல்லாத காரணத்தால் நான்கு பேரும் ஊர் திரும்புவது என முடிவு செய்தனர். இதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் பயன்படுத்தப்பட்ட சைக்கிளை விலைக்கு வாங்கியுள்ளனர்.
கடந்த 29ஆம் தேதி காலை சாலக்குடியில் இருந்து நான்கு பேரும் உத்தரப் பிரதேசம் செல்ல சைக்கிளில் புறப்பட்டனர். இன்று மதியம் 4 பேரும் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதிக்கு வந்தடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது கேரள மாநிலத்தில் வேலை செய்து வந்ததாகவும் வருமானம் இல்லாததால் மிதிவண்டியில் ஊர் திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 4 பேரையும் ஒரு இடத்தில் அமர வைத்து அவர்களுக்கு மதிய உணவை வழங்கிய அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்து தந்தனர். 4 பேரும் பசியாறியதோடு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு சைக்கிளில் மூலம் உத்தர பிரதேசம் நோக்கி பயணிக்க துவங்கினர்.