வால்பாறையில் காட்டெருமை தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்

கோவை: வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சோலையார் அணையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது முருகாளி எஸ்டேட். இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த எஸ்டேட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(37). இவர் தேயிலை தோட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது புதர் மறைவிலிருந்து திடீரென காட்டெருமை ஒன்று தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ் படுகாயத்துடன் தரையில் விழுந்தார். 

இதையடுத்து, அலெக்ஸின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அலெக்ஸை தோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். 



அங்கு முதலுதவிக்கு பின் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ச்மன் ஆலோசனையின் படி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 



இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அலெக்ஸ் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...