கோவையில் முதலமை‌ச்ச‌ரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் சேமிப்பு தொகையை வழங்கிய கல்லூரி மாணவி!

கோவை: கோவையில் இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவி முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தனது சொந்த சேமிப்பு தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

கோவை: கோவையில் இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவி முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தனது சொந்த சேமிப்பு தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய சரகம் கீரநத்தம் பத்தகாரன் தோட்டத்தை சேர்ந்த அனுஸ்ரீ என்பவர் தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வழங்கினார்.

இவர் பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சி.ஏ. படிக்கும் மாணவி என்பதும், இவர் தனது சொந்த சேமிப்பு மற்றும் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தையும் கோவிட் பரவலை தடுப்பதற்காக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...