கோவை: இஸ்லாமியர் என்பதால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதாக புகார் எழுந்த விவகாரத்தில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவரின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான கே.ஜி.மருத்துவமனையில் இஸ்லாமியர் என்பதால் தனது மனைவிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாகவும், இதனால் கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறி வாட்ஸ் அப் வீடியோ ஒன்று வைரலானது.
அதில் கே.ஜி.மருத்துவமனை ஊழியர்களுடன் பாதிக்கப்பட்ட நபர் வாக்கு வாதம் செய்யும் காட்சிகள் இருந்தது. இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணி பெண்ணிற்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றம்சாட்டி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்தும்படி சுகாதாரதுறை இணை இயக்குனருக்கு உத்திரவிட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு எனவும் பெண்ணிற்கு காய்ச்சல் இருந்ததால் அவர்களை இ.எஸ்.ஐ மருத்துவமனை அல்லது வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க சொன்னதாகவும் கொரோனா சோதனை செய்ய வசதி இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க சொல்லியதாகவும், கே.ஜி.மருத்துவமனை நிர்வாகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,கோவை கே.ஜி. மருத்துவமனை நிர்வாகம் மீது தமுமுக அமைப்பினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் முகமது ஆசிக்கை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முகமது ஆசிப், மனைவி மஹ்தியா வயிற்று வலியால் துடித்ததால் கே.ஜி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தனர் எனவும் தெரிவித்தார்.
அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று சொன்னதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் எனவும் வேறு தனியார் மருத்துவமனையில் உடனே செக்கப் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் கூறிய அவர், கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தாமதமானதால் மனைவிக்கு அபார்ஷன் ஆனதாக தெரிவித்தார்.
இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக புகார் செய்துள்ளேன் எனவும் மதம் மருத்துவம் பார்ப்பதற்கு தடையாக இருக்க கூடாது எனவும் அவர் கூறினார்.
கே.ஜி. மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கே.ஜி.நிர்வாகம் காய்ச்சல் என திசை திருப்ப பார்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.