கோவையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இருவேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலி!

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அடுத்த சரவணம்பட்டி வாரதாயங்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது தாயார் சாந்தாவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது சக்தி சாலை மூர் மார்க்கெட் அருகே எதிரில் வந்த டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் மோதியது.

இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரது தாயார் சாந்தாவை காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ரவிகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல, கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் இருசக்கர வாகனத்தில் சேலம் - கொச்சி புறவழிச்சாலையில் கஞ்சிக்கோணம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, மாட்டு வண்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் உயிரிழந்தார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 38 நாட்களில் நேற்று ஒரே நாளில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...