அரசு சலுகைகள் அளித்தால் மட்டுமே வெட் கிரைண்டர் உற்பத்தியை மீண்டும் துவக்க முடியும் - வெட் கிரைண்டர் உற்பத்தியாளர் கவுமா சங்கம் அறிவிப்பு

கோவை: அரசு சலுகைகள் அளித்தால் மட்டுமே வெட் கிரைண்டர் உற்பத்தியை மீண்டும் துவக்க முடியும் என்று வெட் கிரைண்டர் உற்பத்தியாளர் கவுமா சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


கோவை: அரசு சலுகைகள் அளித்தால் மட்டுமே வெட் கிரைண்டர் உற்பத்தியை மீண்டும் துவக்க முடியும் என்று வெட் கிரைண்டர் உற்பத்தியாளர் கவுமா சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புகள் குறித்து கோவை மாவட்ட வெட்கிரைன்டர் தயாரிப்பாளர் சங்கத்தினர் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது, பேசிய அந்த அமைப்பின் தலைவர் சௌந்திரகுமார், ஊரடங்கு காரணமாக வெட் கிரைன்டர் தயாரிப்பாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் ஊரடங்கு முடிந்தவுடன் உடனடியாக தொழிலை துவங்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார். 

வங்கிகளில் வட்டி சலுகை, வட்டி தள்ளுபடி, மானியம் போன்றவை வெட்கிரைன்டர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் வங்கிகள் வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 3 மாதத்திற்கான வட்டிதொகையினை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த தொழிலில் 600க்கும் மேற்பட்ட கிரைண்டர் தயாரிப்பாளர்களும் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் நேரடியாக இந்த தொழிலில் உள்ளனர் எனவும் மறைமுகமாக இந்த தொழிலை நம்பி 40 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.

ஊரடங்கிற்கு பின்னர் வெட்கிரைன்டர் உற்பத்தியாளர்களுக்கு அரசு மூலதன முதலீட்டை மானியமாக வழங்கவேண்டும் எனவும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஊழியர்களுக்கு எந்த வருவாயும் இன்றி சம்பளம் கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

விற்றுமுதல்(Turn over) அடிப்படையில் மூலதன முதலீட்டை மானியமாக அரசு வழங்கிட வேண்டும் எனவும் இந்த தொழிலை நம்பியுள்ள 40 ஆயிரம் குடும்பத்தினரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சௌந்திரகுமார் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...