கோவையில் கால் கொலுசை விற்று ஊர் மக்களுக்கு கபசுர குடிநீர் சூரணம் வாங்க உதவிய ஏழை பெண்ணின் செயலை பாராட்டி ரூ.2000 வழங்கிய துணிக்கடை உரிமையாளர்!

கோவை: அன்னூர் அருகே தனது பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்க தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்ற ஏழை பெண்ணின் செயலை பாராட்டி துணிக்கடை உரிமையாளர் ரூ. 2000 வழங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கோவை: அன்னூர் அருகே தனது பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்க தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்ற ஏழை பெண்ணின் செயலை பாராட்டி துணிக்கடை உரிமையாளர் ரூ. 2000 வழங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

கோவை அன்னூர் அருகே பொண்ணே கவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா(22). தாயை இழந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கவிபிரியா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், அருகில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் மிகவும் எழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்.

அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் அப்பகுதி மக்களுக்கு கொரோனா நோய் ஏற்படாமல் தடுக்க கபசுர சூரணம் பொடி வாங்கி காய்ச்சி கபசுர குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதில் உறுப்பினரான கவிபிரியா தனது ஊரான பொண்ணே கவுண்டன்புதூர் மக்களுக்கும் கபசுர குடிநீர் சூரணத்தை கொடுக்க விரும்பினார்.

இதனை அடுத்து, தனது கால் கொலுசை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கபசுர குடிநீரை காய்ச்சி மக்களுக்கு கொடுத்தார். இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகநூலில் பதிவிட்டு இருந்தனர். 

இதனை கண்ட திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அர்ஹாம் பேஷன்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வரும் அதன் உரிமையாளர் அன்வர் அந்த பெண்ணிற்கு உதவிட வேண்டும் என்று எண்ணி திண்டுக்கல்லில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் பாலமுருகனை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

இதனையடுத்து, பாலமுருகன் அன்னூர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு உள்ளார். கவிபிரியாவை அலைபேசியில் தொடர்பு கொண்ட அன்வர் அவரது நண்பரின் வங்கி கணக்கிற்கு 2000 ரூபாய் அனுப்பி வைத்து உள்ளார்.

இது குறித்து அன்வர் கூறுகையில், மக்களுக்கு உதவ வேண்டும் என தனது கால் கொலுசை விற்று கபசுர குடிநீர் காய்ச்சி கொடுத்த கவிபிரியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என எண்ணியதாகவும் 1000 ரூபாய்க்கு கால் கொலுசை விற்ற அவருக்கு தன்னால் முடிந்த உதவியாக 2000 ரூபாயை வழங்கியதாக தெரிவித்தார். மேலும், மதங்களை தாண்டி மனித நேயம் காக்கப்பட வேண்டும் என்றார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...