கோவையில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா இ.கா.ப.,கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப.,ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இ.கா.ப.,பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து கள்ளு மற்றும் சாராயம் தயாரிக்கும் குற்றச்செயல்களில் பல்வேறு நபர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டு கோவை மாவட்டத்தில் இதுவரை 10 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20.200 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சாராய ஊறல் போடப்பட்டது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 610 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டதோடு இது சம்மந்தாக மூன்று குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல, கள்ளு இறக்கி விற்பனை செய்தது தொடர்பாக 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1478 லிட்டர் கள்ளு கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...