கோவையில் கால் கொலுசை விற்று ஊர் மக்களுக்கு கபசுர குடிநீர் சூரணம் வாங்க உதவிய ஏழை பெண்..!

கோவை: அன்னூர் அருகே தனது பகுதியில் வசிக்கு ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்க தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்ற ஏழை பெண்ணின் செயலால் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கோவை: அன்னூர் அருகே தனது பகுதியில் வசிக்கு ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்க தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்ற ஏழை பெண்ணின் செயலால் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கோவை அன்னூர் அருகே பொண்ணே கவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா(22). தாயை இழந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கவிபிரியா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், அருகில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் மிகவும் எழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்.

அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் அப்பகுதி மக்களுக்கு கொரோனா நோய் ஏற்படாமல் தடுக்க கபசுர சூரணம் பொடி வாங்கி காய்ச்சி கபசுர குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

இதில் உறுப்பினரான கவிபிரியா தனது ஊரான பொண்ணே கவுண்டன்புதூர் மக்களுக்கும் கபசுர குடிநீர் சூரணத்தை கொடுக்க விரும்பினார்.

இதனையடுத்து, தனது கால் கொலுசை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கபசுர குடிநீரை காய்ச்சி மக்களுக்கு கொடுத்தார். கவிப்பிரயாவின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...