கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 பேர் கைது செய்த போலீசார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 பேர் கைது செய்த போலீசார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து கருமத்தம்பட்டி காவல் நிலைய போலீசார் சோமனூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்களின் உத்தரவின் பேரிலும் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளர் அரவிந்தராஜ் காவலர்கள் மகேந்திரன் முத்து யுவராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, சோமனூர் மீனாம்பிகா தியேட்டர் அருகில் செயல்பட்டு வந்த மகாசக்தி மளிகை, பானு ஜூவல்லரி அருகில் இயங்கி வந்த பவானி மளிகை, பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராம்தேவ் மளிகை கடைகளில் சோதனை செய்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மங்கல்ராம், விக்ரம், கிஷோர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.