கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 பேர் கைது - ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 பேர் கைது செய்த போலீசார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 பேர் கைது செய்த போலீசார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து கருமத்தம்பட்டி காவல் நிலைய போலீசார் சோமனூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்களின் உத்தரவின் பேரிலும் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளர் அரவிந்தராஜ் காவலர்கள் மகேந்திரன் முத்து யுவராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது, சோமனூர் மீனாம்பிகா தியேட்டர் அருகில் செயல்பட்டு வந்த மகாசக்தி மளிகை, பானு ஜூவல்லரி அருகில் இயங்கி வந்த பவானி மளிகை, பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராம்தேவ் மளிகை கடைகளில் சோதனை செய்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மங்கல்ராம், விக்ரம், கிஷோர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...