கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ மாவட்ட ஆட்சியர் ஆய்வு; 100 துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ இன்று (26.04.2020) மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ இன்று (26.04.2020) மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. 

தொடர்ந்து அங்கு பணியாற்றும்‌ 100 துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, கோதுமை, சமையல்‌ எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப்‌ பொருட்களை வழங்கினார்‌. 

பின்னர்‌ மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள்‌ தெரிவித்ததாவது;-

கொரோனா வைரஸ்‌ தொற்றினை தடுக்கவும்‌ அதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆலோசனையின் படியும்‌, உத்தரவின் படியும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட நிர்வாகம்‌ போர்கால அடிப்படையில்‌ பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில்‌ உள்ள இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி படுக்கை வசதிகளிலும்‌, மருத்துவமனை கட்டமைப்பிலும்‌ போதிய வசதிகள்‌ குறித்து அறிந்து அம்மருத்துவமனையினை COVID-19 சிகிச்சை அளிக்கும்‌ பிரத்யேக மருத்துவமனையாக அறிவித்தார். 

இங்கு கொரோனா சிகிச்சை தவிர்த்து வேறெந்த சிகிச்சைகளும்‌ தற்போது அளிக்கப்படுவதில்லை. இம்மருத்துவமனையில்‌ மருத்துவர்கள்‌ செவிலியர்கள்‌ கொண்ட குழுக்கள்‌ அமைக்கப்பட்டு 24 மணி நேரமும்‌ செயல்பட்டு வருகின்றது. மேலும்‌ ஒரு குழு தயார்நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும்‌ துப்புரவு பணியாளர்கள்‌ முதல்‌, மருத்துவர்கள்‌ வரை அனைவரும்‌ பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புடன்‌ பணியாற்றி வருகின்றனர்‌.

கோவை மாவட்டத்தில்‌ சுமார்‌ 4560 நபர்களுக்கு மேல்‌ சிகிச்சை மேற்கொண்டதில்‌ 141 பேர்‌ கொரோனா வைரஸால்‌ பாதிக்கப்பட்டுள்ளது

கண்டறியப்பட்டு இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரியில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில்‌ தற்போதுவரை 116 பேர்‌ குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்‌. கொரோனா வைரஸ்‌ பாதிப்பிலிருந்து குணமடைந்த பலரும்‌ பிளாஸ்மா சிகிச்சையளிக்க தங்களை பயன்படுத்தி கொள்ளலாம்‌ என விருப்பம்‌ தெரிவித்துள்ளனர்‌.

மேலும்‌, கோவை மாவட்டத்தில்‌ மாநகரப்பகுதிகள்‌ மற்றும்‌ ஊரகப்பகுதிகளில்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ 18 இடங்கள்‌ கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர்கள்‌ அவர்களால்‌ தற்போது கொரோனா வைரஸ்‌ சமூக பரவலை தடுக்க கோவை மாநகர பகுதிகளில்‌ முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில்‌ பொதுமக்கள்‌ வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய பொருட்கள்‌ கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள்‌ நலன்‌ காப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரசால்‌ அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கினை பின்பற்றாமல்‌, அவசிய காரணங்கள்‌ தவிர்த்து வெளியில்‌ வருபவர்கள்‌ மீது காவல்‌ துறை மூலம்‌ கட்டாயம்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்‌.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...