ஊரடங்கிலும் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு நல்லறம் அறக்கட்டளை சார்பில் 50 கிலோ அரிசி 10 ஆயிரம் பணம் நிதியுதவி!

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு நல்லறம் அறக்கட்டளை சார்பில் 50 கிலோ அரிசி 10 ஆயிரம் பணம் நிதியுதவி வழங்கப்பட்டது.

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு நல்லறம் அறக்கட்டளை சார்பில் 50 கிலோ அரிசி 10 ஆயிரம் பணம் நிதியுதவி வழங்கப்பட்டது. 

ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றவுடனே நியாபகதிற்கு வருபவர் கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம் பாளையம் கமலாத்தாள் பாட்டி. கொரோனா எதிரொலி காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி.

வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார். தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பொட்டுக்கடலை, உளுந்து ஆகியன தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் மிளகாய் 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் புன்னகை மாறாமல் எப்படியாவது சமாளித்து ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்து வருகிறார். 

மேலும், தன்னை தேடி பல பேர் வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்களை கொடுத்து வருவதாகவும் இட்லி பாட்டி கமலாத்தாள் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் கமலாத்தாள் பாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று 50 கிலோ அரிசி மற்றும் 10,000 ரூபாய் பணத்தை நேரில் அளித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ கால் மூலம் கமலாத்தாள் பாட்டியிடம் நேரடியாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நலம் விசாரித்ததோடு தேவையான உதவிகளை செய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன் இட்லி பாட்டிக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகளை வழங்கினார். மேலும், இட்லி பாட்டிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...