வால்பாறை ஸ்டான்மோர் எஸ்டேட்டை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு தி.மு.க சார்பில் காய்கறி பைகள் விநியோகம்!

கோவை: வால்பாறை ஸ்டான்மோர் எஸ்டேட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் காய்கறி பைகள் விநியோகம் செய்யப்பட்டது.

கோவை: வால்பாறை ஸ்டான்மோர் எஸ்டேட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் காய்கறி பைகள் விநியோகம் செய்யப்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் பரவாமல் தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எவ்வித தொழில்களும் செய்யமுடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வருவாயின்றி தவித்து வரும் மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். 



இந்நிலையில், வால்பாறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஸ்டோன்மோர் எஸ்டேட், சவராங்காடு எஸ்டேட், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு ஸ்டான்மோர் பகுதி தி.மு.க பிரமுகர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் காய்கறிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

வால்பாறை வட்டாட்சியர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் காய்கறி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். ஸ்டான்மோர் பகுதி தி.மு.க நிர்வாகி எஸ் ஆர்.எஸ்.சுரேஷ் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் பால்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் செல்வம், ஜே.பாஸ்கர், அம்பிகை சுப்பையா இ.கா பொன்னுச்சாமி டென்னிஸ், செந்தில், ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...